MARC காட்சி

Back
சிவன்கூடல் சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்
245 : _ _ |a சிவன்கூடல் சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில் -
246 : _ _ |a சிவக்கொழுந்தீஸ்வரர், சிவக்கொழுந்தாண்டார்
520 : _ _ |a விக்கிரமச்சோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் முழுவதும் கற்றளியாக அமைந்தது. விக்கிரமச் சோழன் காலத்து கல்வெட்டில் இறைவன் சிவக்கொழுந்தாண்டார், சிவக்கொழுந்தீஸ்வரர் என்று குறிப்பிடப்படுகிறார். கி.பி.13-ஆம் நூற்றாண்டில் அம்மன் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.ஆனால் தற்போது தளஅமைப்பு இடம்பெறவில்லை. பிற்காலச் சோழர் கட்டடக் கலைப்பாணியை பறைசாற்றி நிற்கின்றது. விக்கிரமச் சோழன் காலத்து கல்வெட்டில் இறைவன் சிவக்கொழுந்தாண்டார், சிவக்கொழுந்தீஸ்வரர் என்று குறிப்பிடப்படுகிறார். கி.பி.13-ஆம் நூற்றாண்டில் அம்மன் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
653 : _ _ |a சிவன்கூடல், சிவக்கொழுந்தீஸ்வரர், சிவக்கொழுந்தாண்டார், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மரபுச் சின்னங்கள், விக்கிரமச் சோழன், மரகதவல்லி நாச்சியார், பிற்காலச் சோழர் கட்டடக்கலை, தட்சிணாமூர்த்தி, விநாயகர், விஷ்ணு
710 : _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
905 : _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு / விக்கிரம சோழன்
909 : _ _ |a 1
910 : _ _ |a 800ஆண்டுகள் பழமையானது. பிற்கால சோழர் கால கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது.
914 : _ _ |a 12.90742424
915 : _ _ |a 79.79131401
916 : _ _ |a சிவக்கொழுந்தீஸ்வரர்
918 : _ _ |a மரகதவல்லி நாச்சியார்
927 : _ _ |a இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை 286/1912, 284/1912-இல் இக்கல்வெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள் என்னும் நூலில் இக்கோயிலில் உள்ள 18 கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன. அர்த்த மண்டப வடபுற எழுதகப்படையில் உள்ள ஒரு கல்வெட்டு சிதைந்துள்ளது. இதில் சிவக்கொழுந்துடையார் கோயிலில் ஆனி உத்திரட்டாதியில் திருவிழா நடத்துவதற்காக நிலம் விற்ற செய்தி கூறப்பட்டுள்ளது. முதற் குலோத்துங்கனுடைய மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் ஒரு கல்வெட்டு நிலவிலை ஆவணம் பற்றிக் குறிப்பிடுகிறது. இக்கோயிலின் அர்த்தமண்டப வடசுவர் துர்க்கை சிற்பம் அருகில் உள்ள ஒரு கல்வெட்டில், தேவகோஷ்டத்தில் உள்ள துர்க்கை தெய்வத்தின் வழிபாட்டுச் செலவிற்காக சிவன்கூடல் கணக்கன் நாளப்பிள்ளை 100 குழி நிலம் கொடுத்த செய்தி சொல்லப்படுகிறது. கருவறையின் வடசுவரில் உள்ள முதற்குலோத்துங்கனின் கல்வெட்டொன்று, சிவன்கூடல் மகாசபையார் 16 சாண் கோல் அளவுடைய 300 குழி நிலத்தை பெருவிலையாக விற்றுக்கொடுத்தமை சொல்லப்படுகிறது. நிலத்திற்குரிய வரிகள் சபையாரே செலுத்த ஒப்புக் கொண்டமையும் குறிக்கப்படுகிறது. மற்றொரு கல்வெட்டு, சிவன்கூடல் மகாசபையார் மற்றும் வெள்ளாளர் ஆனி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தை மையமாகக் கொண்ட 7 நாள் விழா நிகழக் கோயிலுக்கு ஆதி சண்டேசுவர் பேரில் நிலம் விற்றுக் கொடுத்தமை சொல்லப்படுகிறது. முதலாம் குலோத்துங்கனின் மற்றொரு கல்வெட்டு இக்கோயிலில் திருப்பதியம் பாடுவதற்கு அவ்வூர் சபையார் நிலக்கொடையளித்த செய்தியைக் குறிப்பிடுகிறது. விக்கிரமசோழனின் கல்வெட்டொன்று சிவன்கூடல் மகாசபையார் மற்றும் வெள்ளாளர்கள் சிவக்கொழுந்தாண்டார் கோயிலில் இரு விளக்குகள் எரிப்பதற்காக 400 குழி நிலம் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது. இந்நிலம் கோயிலிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்டு அதற்கு உரிய வரிகள் செலுத்துவதாகவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. சிவக்கொழுந்துடையார் கோயில் கருவறை மேற்கு, தெற்கு முப்பட்டைக் குமுதத்தில் உள்ள வீரராசேந்திர சோழன் காலத்திய கல்வெட்டொன்று, சிவன்கூடல் சபையார் சிவக்கொழுந்தாண்டாருக்குப் பூசை செய்வார்க்காக ஒரு குறிப்பிட்ட நிலத்தினைக் கோயிலாரிடம் விலைக்குப் பெற்றுக் கொடுத்த செய்தியைக் குறிப்பிடுகிறது. விலைக்குப் பெற்ற ஆவணமாக இக்கல்வெட்டு பதியப்பட்டுள்ளது. இக்கோயில் மகாமண்டபக் கிழக்கு முப்பட்டைக் குமுதம் மற்றும் ஜகதியில் உள்ள மற்றொரு கல்வெட்டில், விஜயநகரர் அரசன் அச்சுத தேவராயர் விருபாட்சியில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் இருந்தபோது சிவன்கூடலைச் சார்ந்த பிடாகை ஓபுளாச நல்லூரினைச் சிவன்கூடல் இறைவனுக்கு படையல், பூசை, தீபவழிபாடு ஆகியவற்றிற்குத் தானமாகக் கொடுத்த செய்தியும், இவ்வூர் நிலத்திற்குரிய பாசனவசதிகளும் சொல்லப்படுகின்றன. மகாமண்டப வாயிலில் பெரியனயினான், பச்சைனாயநன் ஆகியோருடைய சதாசேவை என்ற இருவரி கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தெலுங்குச் சோழ மன்னன் விஜயகண்டகோபாலனின் 25-வது ஆட்சியாண்டில் சோழமண்டலத்து ஊத்துக்காட்டுக் கோட்டத்து நீர்வேளுர் நாட்டு சிவன் கூடல்லுடையார் சிவக்கொழுந்துடைய நாயனார் கோயில் திருக்காமக்கோட்டமுடைய மரகதவல்லி நாச்சியாற்கு சோழநாட்டைச் சேர்ந்த தாழைக்குடையனான புலியூரன் என்பவன் 2400 குழி அளவுள்ள நிலத்தை கோயில் நிலமாக இறைவி பெயில் கொடுத்த செய்தியை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகின்றது. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திய கல்வெட்டு ஒன்றில் சிவக்கொழுந்தாண்டாரின் வழிபாடு மற்றும் அமுது படையலுக்காக ஊர்ச்சபையார் நிலம் விற்றுக் கொடுத்த செய்தி சொல்லப்படுகிறது. அர்த்தமண்டப தென்சுவரில் உள்ள அம்மன்னனின் மற்றொரு கல்வெட்டில், சிவன் கூடல் இறைவனுக்கு நந்தவனம் அமைக்கவும், நொந்தா விளக்கெரிக்கவும், மார்கழித் திருவாதிரை நெய்யாடல் அமுதுபடிக்காகவும் இவ்வூர் மகாசபையார், மணிமங்கலத்தைச் சேர்ந்த பஞ்சநதிவாணன் சோழேந்திர மூவேந்த வேளானுக்கு நிலம் விற்று ஆவணம் எழுதிய செய்தி சொல்லப்படுகிறது.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறை தேவகோட்டங்களிலும், அர்த்தமண்டபக் கோட்டங்களிலும் முறையே தெற்கில் தட்சிணாமூர்த்தி, அர்த்தமண்டப கோட்டத்தில் தெற்கில் விநாயகரும், மேற்கில் விஷ்ணுவும் அமைக்கப்பட்டுள்ளனர்.
932 : _ _ |a கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத்தில் தளங்கள் தற்போது இல்லை. தெற்கு நோக்கிய நுழைவு வாயிலைக் கொண்டுள்ளது. கருவறை தேவக்கோட்டத்தில் சிற்பங்கள் உள்ளன. தேவக்கோட்டங்கள் அரைத்தூண்களுடன் விளங்குகின்றன.
933 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a இடையார்பாக்கம் சிவன்கோயில், சிவபுரம்
935 : _ _ |a சென்னை-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து 58 கி.மீ. தொலைவில் உள்ள செல்வழிமங்கலத்திற்கு வடக்கே 10 கி.மீ. தொலைவில் திருப்பெரும்புதூர் வட்டத்தில் சிவன்கூடல் என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
937 : _ _ |a சிவன்கூடல்
938 : _ _ |a திருவள்ளுர், செங்கல்பட்டு
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a திருப்பெரும்புதூர் விடுதிகள், திருவள்ளுர் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000018
barcode : TVA_TEM_000018
book category : சைவம்
cover images TVA_TEM_000018/TVA_TEM_000018_சிவக்கொழுந்தீஸ்வரர்-கோயில்_நுழைவாயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000018/TVA_TEM_000018_சிவக்கொழுந்தீஸ்வரர்-கோயில்_நுழைவாயில்-0001.jpg

TVA_TEM_000018/TVA_TEM_000018_சிவக்கொழுந்தீஸ்வரர்-கோயில்_முழுத்தோற்றம்-0002.jpg

TVA_TEM_000018/TVA_TEM_000018_சிவக்கொழுந்தீஸ்வரர்-கோயில்_தாங்குதளம்-0003.jpg

TVA_TEM_000018/TVA_TEM_000018_சிவக்கொழுந்தீஸ்வரர்-கோயில்_சுவர்-0004.jpg

TVA_TEM_000018/TVA_TEM_000018_சிவக்கொழுந்தீஸ்வரர்-கோயில்_தட்சிணாமூர்த்தி-0005.jpg

TVA_TEM_000018/TVA_TEM_000018_சிவக்கொழுந்தீஸ்வரர்-கோயில்_முன்மண்டபம்-0006.jpg

TVA_TEM_000018/TVA_TEM_000018_சிவக்கொழுந்தீஸ்வரர்-கோயில்_விஷ்ணு-0007.jpg

TVA_TEM_000018/TVA_TEM_000018_சிவக்கொழுந்தீஸ்வரர்-கோயில்_முகமண்டபம்-0008.jpg

TVA_TEM_000018/TVA_TEM_000018_சிவக்கொழுந்தீஸ்வரர்-கோயில்_இலிங்கம்-0009.jpg

TVA_TEM_000018/TVA_TEM_000018_சிவக்கொழுந்தீஸ்வரர்-கோயில்_பாதை-0010.jpg